1 ஜூலை, 2011

தமிழில் எண்கள்

"...இன்னும் சொல்லப்போனா 10^1 முதல் 10^10 வரைக்கும் கூட தமிழ் வார்த்தைகள் இருக்கு ஆணால் அது பலபேருக்கு தெறியாது..... "

ஆரோக்கிய சுந்தர்ன்ற என் நண்பர் சொன்னதை தொடர்ந்து, இந்த ‘தமிழில் எண்கள்’ தோன்றிற்று.

இவரு சொன்னத முகநூல்ல பார்த்து கருத்து தெரிவித்தது நடுமண்டையில் ‘நச்’ என்றிட, கூகிள்லில் தேடினேன்..  

ஒரு படம் வந்தது.. படமா போட்ட நல்லா இருக்கதேன்னு உக்காந்து உக்காந்து அதை தமிழில் தட்டச்சு செய்து இங்கு இட்டுள்ளேன்.

பெரும்பாலும் யாரும் இதை அன்றாட வாழ்வில் உபயோகப் படுத்த மாட்டோம். ஆனா, தெரிஞ்சு வச்சுக்குறது நல்லது.

30 ஜூன், 2011

Happy.. Happy… Time to party…

எல்லாருக்கும் ஒரு சந்தேஷமான விசியம்… நம்ம தமிழ் இல்ல தமிழ்… அதாங்க… நம்ம மொழி… அத கூகிள் இன்னும் ஒருபடி மேல கொண்டுபோயிருக்கு… 
 
என்னன்னு கேக்குறீங்களா…

போனவாரம், கூகிள், இங்கிலிஷ் டு தமிழ் கன்வர்ட் பண்ற translatorஅ ரிலீஸ் பண்ணீடுச்சு…

அதாவது… இதுவரைக்கும் தமிழ்ல எழுதனும்னா தமிழ் வார்த்தைகள‌ இங்கிலீஷ்ல Type பண்ணி அத தமிழ்ல மாத்துவேம்..

ஆனா இப்போ… இங்கிலீஷ்ல எழுதுன செய்திய அப்படியே தமிழ்ல மாத்தலாம்…

ஒரு எடுத்துக்காட்டுக்கு.. “பிளாக்கர் ஒரு நல்ல சமூக ஊடக உள்ளது”ன்னு தமிழ்ல எழுத “blogger oru nalla samOga Udaaga ullathu”ன்னு இங்லிஷ்ல எழுதுனா அது தமிழ்ல  transcription ஆகும்.. இது பலசு..



ஆனா.. இப்போ வந்துருக்குற “Google Translator“ல “blogger is a good social media”ன்னு டைப் பண்ணா போதும்… அதுவே தமிழ்ல‌ மாறிடுது… 

சோ.. கூகிள் பேங்க… என்ஞாய் பண்ணுங்க..

சுட்டி: http://translate.google.com/

28 ஜூன், 2011

Drupal language conversion

அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் வணக்கம்,


உங்கள் அனைவருக்கும் தமிழ் மீது தீராத ஆர்வம் இருக்கும் என்கின்ற உண்மையோடும்,


தமிழில் தொழில்நுட்பம் வளர்க்க உங்கள் வசம் பெறும் ஈடுபாடு இருக்கும் என்கின்ற எண்ணத்திலும்,


இதோ…


துருப்பாலை(Drupal) தமிழில் மாற்றிட உங்களை அழைக்கின்றேன்..


என்ன இது துருப்பால்?

துருப்பால் என்பது ஒரு PHPயால் எழுதப்பட்டு, GNUவின் கீழ் பரவலாக்கப்பட்ட பொது உரிமம் பெற்ற இலவச, திறமூல உள்ளடக்க மேலாண்மைக் கட்டகம்.

இது திறமூல மென்பொருள் என்பதால் மிகவும் பிரசித்திப் பெற்று வருகின்றது. அதை தமிழில் உபயோகப்படுத்த நாம் தான் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். 3500 வாக்கியங்களில், 2000 வாக்கியம் ஏற்க்கனவே மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. மீதம் 1500 தான்.

தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்ய?

தமிழ் மொழியில் தட்டச்சு செய்ய “கூகிள்” உபயோகிக்கலாம்.. (சுட்டி:http://www.google.com/transliterate/) இதில், “New! Download Google Transliteration IME” என்பதில் சென்று தமிழ் மொழி பெயர்ப்பு கருவியை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். (அதே பக்கதிதில் நிறுவல் குறிப்பு உள்ளதை கவனிக்க).

இல்லையெனில், Higopi இணைய தளத்தை உபயோகிக்கலாம். (சுட்டி:http://www.higopi.com/ucedit/Tamil.html. உங்களுக்கு அந்த இணையதள பக்கம் வேண்டுமெனில் பின்னுட்டத்தில் குறிப்பிடுக.)

நான் என்ன செய்ய வேண்டும்?

http://localize.drupal.org/translate/languages/ta என்ற சுட்டிக்குச் சென்று உங்களை அந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

பின்னர் http://localize.drupal.org/translate/languages/ta/translate?project=drupal&status=5&release=202979&search&author&context=all&limit=10&sid=0
என்ற சுட்டிக்குச் சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை தமிழாக்கம் செய்யவும்.
எவ்வாறு செய்ய வேண்டும்?

உள்நுளைந்தவுடன், மேல் கண்டது போல் ஒரு பக்கம் வரும்.

அதில் உள்ள தட்டச்சு பெட்டியில் நீங்கள் தமிழில் மொழிபெயர்த்த வாக்கியங்களை இடவும்.  பின், பக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள “Save Changes” பெத்தானை அழுத்தவும்.

வார்த்தைகளுக்கு அர்த்தம் தமிழில் தெரியவில்லை?

சில வார்த்தைகளுக்குச் சரியான தமிழ்ச்சொல் தெரியாவிட்டால் கீழ்காணும் முகவரிகளைப் பயன்படுத்தவும்.

http://ta.wiktionary.org/
http://www.tamildict.com/

இந்த தளங்கள் நல்ல, தரமான வார்த்தைகளை தருகின்றது.


இந்த செய்தி போதுமானது என்று கருதுகின்றேன். ஏதேனும் ஐயப்பாடு இருப்பின் பின்னுட்டதிலிடவும்.


உங்கள் தமிழ் ஆர்வத்தை ஊர் உலகம் பாராட்டட்டும்.


அன்புடன்,
க. மாதேசுவரன்.

27 பிப்., 2011

எனக்கு ஒரு (சில‌) உண்ம தெரிஞ்சாக​ணும்

1. கம்பெனில KT-ன்ற பேர்ல ஏன் இப்படி நம்மல கழுத்தருக்குறாங்க?

2. ஒருத்தன் நல்ல வேல பார்த்தாலும் “Appraisal”ல ஏன் ஆப்பு வைக்குறாங்க?

3. “Go Green… Go Cognizant”ன்னு மெயில் அனுப்பிட்டு கம்பெனி பில்டிங் ஏன் காட்டில கட்டி காட்ட அழிக்கிராங்க?

26 பிப்., 2011

ஒரு குட்டி சிந்தனை

காதலின் குழந்தை கூடல் என்றால்….

ஈன்ற பின் இறக்கும் நண்டானது இன்றைய காதல்

குறிப்பு: போஸ்ட் முடிஞ்சிடுச்சு. போய் வேலையா பாருங்க.

1 டிச., 2010

ஆப்பிள் பேன் பசங்க - என்ன கொடுமை சார் இது

நாட்டுல என்னென்னமோ நடக்குது , அத விட கொடுமை என்னன்னா தம்பி மாதேஷ் என்னையும் நம்பி இந்த ப்ளாக்ல என்னையும் டீம் மெம்பர்ன்னு சேர்த்துட்டார்.. என்ன கொடுமைன்னா என்னோட ப்ளாக் எழுதுரதுக்கே எனக்கு வக்கில ;) இதுல கெஸ்ட் போஸ்ட் வேறயா??

ஒருவழியா மாதேஷ் இன்விடேசன் அனுப்பி ரெண்டு மாசம் கழிச்சி ஒரு போஸ்ட் போட போறேன் ..




















26 நவ., 2010

எப்படி தமிழ்-ல டைப் பண்றது??

ரொம்ப நாளைக்கு முன்னாடி, இந்த ப்ளாக்-ல தமிழ்ல போஸ்ட் பண்ண நான் gmailல உள்ள தமிழ் translatorஅ use பண்ணேன். ஒரு போஸ்ட் பண்றதுக்கு சுமார் ஒரு மணிநேரம் (ஒரு குத்து மதிப்பா) ஆன்லைன்-ல இருக்கவேண்டிருந்திச்சு...

அப்போ தான் நம்ம ராஜா அண்ணன் Google TransLitrate பத்தி சொன்னாரு.