"...இன்னும் சொல்லப்போனா 10^1 முதல் 10^10 வரைக்கும் கூட தமிழ் வார்த்தைகள் இருக்கு ஆணால் அது பலபேருக்கு தெறியாது..... "
ஆரோக்கிய சுந்தர்ன்ற என் நண்பர் சொன்னதை தொடர்ந்து, இந்த ‘தமிழில் எண்கள்’ தோன்றிற்று.
இவரு சொன்னத முகநூல்ல பார்த்து கருத்து தெரிவித்தது நடுமண்டையில் ‘நச்’ என்றிட, கூகிள்லில் தேடினேன்..
ஒரு படம் வந்தது.. படமா போட்ட நல்லா இருக்கதேன்னு உக்காந்து உக்காந்து அதை தமிழில் தட்டச்சு செய்து இங்கு இட்டுள்ளேன்.
பெரும்பாலும் யாரும் இதை அன்றாட வாழ்வில் உபயோகப் படுத்த மாட்டோம். ஆனா, தெரிஞ்சு வச்சுக்குறது நல்லது.
தமிழ்ல எண்கள்ல அப்படி என்ன தான் இருக்கு? எம்புட்டு நீள-அகலத்துல எண்கள் போகுதுன்னு தெரிஞ்சிக்கலாமா?
இதோ.. தமிழ் எண்கள்.. உங்கள் பார்வைக்கு.
எண்கள் | தமிழில் | ஆங்கிலத்தில் |
1 | ஒன்று | One |
10 | பத்து | Ten |
100 | நூறு | Hundred |
1000 | ஆயிரம் | Thousand |
10000 | பத்தாயிரம் | Ten Thousand |
100000 | நூறாயிரம் | Hundred Thousand |
1000000 | பத்து நூறாயிரம் | One Million |
10000000 | கோடி | Ten Million |
100000000 | அற்புதம் | Hundred Million |
1000000000 | நிகர்புதம் | One Billion |
10000000000 | கும்பம் | Ten Billion |
100000000000 | கணம் | Hundred Billion |
1000000000000 | கற்பம் | One Trillion |
10000000000000 | நிகற்பம் | Ten Trillion |
100000000000000 | பதுமம் | Hundred Trillion |
1000000000000000 | சங்கம் | One Zillion |
10000000000000000 | வெள்ளம் | Ten Zillion |
100000000000000000 | அன்னியம் | Hundred Zillion |
1000000000000000000 | ஆர்ட்டம் | ? |
10000000000000000000 | பற்றட்டம் | ?? |
100000000000000000000 | பூரியம் | ??? |
1000000000000000000000 | முக்கோடி | ???? |
10000000000000000000000 | மகாயுகம் | ????? |
கொசுறு: (படித்ததில் பிடித்தது:)
ஆகாயத்தில் ஒரு பூந்தோட்டம்
அதில் அழகாய்த் தோன்றினாள்
எம் தமிழ் மூதாட்டி அங்கெ
வாவா என்று அழைத்தென்னை
சொர்க்க வாசல்வரைக்கும்
நடை பயின்றாள்-எனக்கோ
கண்ணில்ப்பட்ட காட்சி எல்லாம்
வெறும் கற்பனையாகத் தெரிந்தது....
அவள் என்னுடன் கதைத்துவந்த
வார்த்தைகள் மட்டும் மிகவும்
அற்புதமாக இருந்தது!!
எழில்கொஞ்சும் நந்தவனமும்
இயற்க்கையும்கூடத் தோத்ததுபோல்
எம்தமிழ்மொழியின் ஏற்றங்கண்டு
என் இதயம் பூரிப்பில் ஆழ்ந்ததுவே!..
சொர்க்கம் என்ன சொர்க்கமடா
நீ சொல்லிப்பாரு எம்தமிழை
கற்றுமுடிக்க முடியாத இன்பக்
கடலாய் விரிந்து செல்லுமடா!....பின்
அற்புதம் அற்புதம் அற்புதம் என்று
உனக்கும் அடிக்கடி சொல்லத் தோன்றுமடா
இத்தனை சிறப்பா என்தாய்மொழிக்கென
உனக்குள் இன்னொரு கேள்வியும் பிறக்குமடா...
நன்றி: அம்பாளடியாள் மற்றும் கூகிள்
தமிழன் என்று சொல்லடா..!!
பதிலளிநீக்குதலை நிமிர்ந்து நில்லடா...!!!
www.ananth4403.tk
ஆகா! ஆகா!! ஆகா!!!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநண்பர்களே மேலுள்ள வரிசையில் "நூறாயிரம்" வரை மட்டுமே தமிழ், அதனை தொடர்ந்து வரரும் சொற்கள் அனைத்தும் தமிழாக்கப்பட்ட சமஸ்கிருத சொற்கள்.
பதிலளிநீக்குஇதனால் தமிழ் மொழி சிறப்பற்றது, என்பதல்ல எனது கருத்து. தமிழையும் அதனுள் உள்ள வேற்று மொழி சொற்களையும் வகை படுத்த நாம் அறிந்திகொள்ள வேண்டும்.
அவ்வாறு அறிந்துகொண்டு நன்தமிழில் எழுதும் பொழுதும் பேசும் பொழுதும் தமிழ் போல் இனியது
வேறில்லை என்ற கருத்துக்கு மறுப்பில்லை.