26 நவ., 2010

எப்படி தமிழ்-ல டைப் பண்றது??

ரொம்ப நாளைக்கு முன்னாடி, இந்த ப்ளாக்-ல தமிழ்ல போஸ்ட் பண்ண நான் gmailல உள்ள தமிழ் translatorஅ use பண்ணேன். ஒரு போஸ்ட் பண்றதுக்கு சுமார் ஒரு மணிநேரம் (ஒரு குத்து மதிப்பா) ஆன்லைன்-ல இருக்கவேண்டிருந்திச்சு...

அப்போ தான் நம்ம ராஜா அண்ணன் Google TransLitrate பத்தி சொன்னாரு.
Offline-ல தமிழ் use பண்றதுக்கு ஒரு நல்ல சாப்ட்வேர். இத வச்சு நீங்க Microsoft Offliceல தமிழ்-ல டைப் பண்ணலாம். Web Browser (like, Ie, Firefox etc.,), Folder Names எல்லாத்துலையும் தமிழ்-ல (தப்பு தப்பா) டைப் பண்ணலாம். J

எப்படி இத install பண்ணனும்னு சொல்றேன்..
1) http://www.google.com/ime/transliteration/ இந்த அட்ரஸ்-க்கு போங்க... கீழ இருக்குற மாதிரி இருக்கும்.


2) choose your IME language-ல தமிழ்-அ choose பண்ணுங்க. பண்ணிட்டு “Download Google IME”அ கிளிக் பண்ணுங்க.
3) googletamilinputsetup.exe Download ஆகும். அந்த exe fileஅ ஓபன் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க.


4) கொஞ்சம் files டவுன்லோட் ஆகும். அதுக்கு அப்புறம், installation.



5) அம்புட்டு தான். இந்த மாதிரி வரும். அதுல, “அ” பட்டன்-ல கிளிக் பண்ண, மொழி மாறும்.

You R Done with installing Google Tamil TransLitrate :)
ஒரு சின்ன அறிவுரை.. தமிழ் to English & இங்கிலீஷ் டு Tamil மாறனும்னா, F12 or Ctrl+g அழுத்துங்க. ஆனா அது போக, Key Board Layouts change பண்ற மாதிரி சில விஷயம் இருக்கு. அத compare பண்ணும் பொது, F12 பெஸ்ட் தான்.. J

இது அல்லவோ தமிழ் வளர்த்தல்.
கூகிள் வாழ்க..
 

6 கருத்துகள்:

  1. நான் "குறள்" மென் பொருள் பயன்படுத்துகிறேன்.அதுவும் எளிமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி பாரதி...

    கூகிள் அவுங்க பண்ற வேலைல சரியா இருப்பாங்க... அதான் அவுங்கள prefer பண்ணேன்... மத்தபடி, அழகி கூட நல்ல இருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. தம்பி - வளர்க உன் தமிழ் சேவை :)

    பதிலளிநீக்கு
  4. உங்க ஆசிர்வாதத்துல எல்லாம் நல்லபடியா நடக்கும் அண்ணா..

    பதிலளிநீக்கு
  5. NHM writer கூட நல்லாயிருக்கும்!

    பதிலளிநீக்கு
  6. அட ஆமாம் திரு.எஸ்.கே.., NHW பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி... :) install பண்ணி, use பண்ண ஆரமிசாச்சு... Tamil Phonetic Unicode நமக்கு ஓகே.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)