28 ஜூன், 2011

Drupal language conversion

அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் வணக்கம்,


உங்கள் அனைவருக்கும் தமிழ் மீது தீராத ஆர்வம் இருக்கும் என்கின்ற உண்மையோடும்,


தமிழில் தொழில்நுட்பம் வளர்க்க உங்கள் வசம் பெறும் ஈடுபாடு இருக்கும் என்கின்ற எண்ணத்திலும்,


இதோ…


துருப்பாலை(Drupal) தமிழில் மாற்றிட உங்களை அழைக்கின்றேன்..


என்ன இது துருப்பால்?

துருப்பால் என்பது ஒரு PHPயால் எழுதப்பட்டு, GNUவின் கீழ் பரவலாக்கப்பட்ட பொது உரிமம் பெற்ற இலவச, திறமூல உள்ளடக்க மேலாண்மைக் கட்டகம்.

இது திறமூல மென்பொருள் என்பதால் மிகவும் பிரசித்திப் பெற்று வருகின்றது. அதை தமிழில் உபயோகப்படுத்த நாம் தான் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். 3500 வாக்கியங்களில், 2000 வாக்கியம் ஏற்க்கனவே மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. மீதம் 1500 தான்.

தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்ய?

தமிழ் மொழியில் தட்டச்சு செய்ய “கூகிள்” உபயோகிக்கலாம்.. (சுட்டி:http://www.google.com/transliterate/) இதில், “New! Download Google Transliteration IME” என்பதில் சென்று தமிழ் மொழி பெயர்ப்பு கருவியை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். (அதே பக்கதிதில் நிறுவல் குறிப்பு உள்ளதை கவனிக்க).

இல்லையெனில், Higopi இணைய தளத்தை உபயோகிக்கலாம். (சுட்டி:http://www.higopi.com/ucedit/Tamil.html. உங்களுக்கு அந்த இணையதள பக்கம் வேண்டுமெனில் பின்னுட்டத்தில் குறிப்பிடுக.)

நான் என்ன செய்ய வேண்டும்?

http://localize.drupal.org/translate/languages/ta என்ற சுட்டிக்குச் சென்று உங்களை அந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

பின்னர் http://localize.drupal.org/translate/languages/ta/translate?project=drupal&status=5&release=202979&search&author&context=all&limit=10&sid=0
என்ற சுட்டிக்குச் சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை தமிழாக்கம் செய்யவும்.
எவ்வாறு செய்ய வேண்டும்?

உள்நுளைந்தவுடன், மேல் கண்டது போல் ஒரு பக்கம் வரும்.

அதில் உள்ள தட்டச்சு பெட்டியில் நீங்கள் தமிழில் மொழிபெயர்த்த வாக்கியங்களை இடவும்.  பின், பக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள “Save Changes” பெத்தானை அழுத்தவும்.

வார்த்தைகளுக்கு அர்த்தம் தமிழில் தெரியவில்லை?

சில வார்த்தைகளுக்குச் சரியான தமிழ்ச்சொல் தெரியாவிட்டால் கீழ்காணும் முகவரிகளைப் பயன்படுத்தவும்.

http://ta.wiktionary.org/
http://www.tamildict.com/

இந்த தளங்கள் நல்ல, தரமான வார்த்தைகளை தருகின்றது.


இந்த செய்தி போதுமானது என்று கருதுகின்றேன். ஏதேனும் ஐயப்பாடு இருப்பின் பின்னுட்டதிலிடவும்.


உங்கள் தமிழ் ஆர்வத்தை ஊர் உலகம் பாராட்டட்டும்.


அன்புடன்,
க. மாதேசுவரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)