21 நவ., 2010

Todays’ Business in Tamil Nadu

இப்போ கொஞ்ச நாளா ஒரு புது விதமான “தொழில் நம்ம நாட்டுல, குறிப்பா தமிழ் நாட்டுல வளந்துக்கிட்டு வருது. தொழில் பேரு “கடத்தல்“ (குறிப்பா குழந்தைகள் கடத்தல்).

அது ரொம்ப நாளா நடந்தாலும், இப்போ தான் கொஞ்சம் நல்ல தீவிரமா நடக்குது. அதுக்கு ரொம்ப முக்கியமானா காரணம், பணம், முன்விரோதம் போக, பொழுது போக்கு-னு கூட சொல்லுவாங்க போல இருக்கு. நார்த் இந்திய-ல போன வருஷம் இதே தொழில் கொடி கட்டி பறந்தது.

இன்னிக்கு நேத்து இல்ல. போன ஜூன் மாசம் “அகில இந்திய மனித உரிமைகள் கழக பெண்கள் பிரிவுத் தலைவி லலிதா” இப்படி மாட்டினது பெரிய ஹை-லைட். அந்த அம்மா மனித உரிமைகள் கழக தலைவி. அவுங்களே இப்படினா…. என்ன கொடும சரவணன் இது.. இதுல இன்னொரு விஷயம்.. அந்த அம்மா படிச்சது எட்டாவது. ஆனா, சம்பாதிச்சது “கோடி”.

அப்புறம், கோவை முஸ்கன் & ரித்திக் விவகாரம் பெரிய பூதகரமா வெடிச்சது. பல பேர கண்ணீர் விட்டு ஆழ வச்சது. இப்போ கூட, டெய்லி நியூஸ்-ல எதாவது ஒரு கடத்தல் சம்பவம் நடந்தது-னு சொல்றான்.

மாசத்துல ஒரு கடத்தல்-னா கூட ஒத்துக்க முடியாது. ஆனா, ஒரு நாளுக்கு ஒரு கடத்தல்-னு தொழில்-ல அமோகம பண்ணுறாங்க.

இத தடுக்க, போலிஸ் கமிஷனர் சைலேந்திரபாபு பல ஐடியா சொல்லிருக்காரு. ஆனா, அது கூட தெரியாம பல பெற்றோர்கள் இருக்குறதுக்கு பேரு “படிச்சா முட்டாள்கள்”.

இதையும் ஒரு தொழில்-னு பண்ணுருவங்காள என்ன பண்ணலாம்??

கலிகாலம்டா சாமி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)