19 நவ., 2010

மொக்கை விளம்பரம்…

ஒரு போஸ்டுக்கு நடுவுல விளம்பர இடைவேளை வர்றது பழசு.


விளம்பரத்தையே கலாய்த்து போஸ்டா போடுறது புதுசு கண்ணா புதுசு :D
இந்த விளம்பரம் இருக்கே அது தான் முக்கால் வாசி நேரம் வருது. அதை பாக்குறது கொடுமை. அவங்க பண்ற அலும்பல் அதை விட கொடுமை. :( நான் பார்த்த கொடுமைகளில் சிலவற்றை கலாய்த்திருக்கிறேன். :twisted:




க்ளோஸ் அப் டூத் பேஸ்ட் - இந்த பேஸ்டை வச்சு பல் தேய்க்கிறவங்க தான் முத்தம் கொடுக்க முடியுமா? என்ன நியாயம் இது… அப்போ உலகத்துல பாதி பேரு முத்தமே கொடுக்க முடியாதே. பல்லே தேய்க்காத ஆடு, மாடெல்லாம் என்ன செய்யும்?  கிஸ்ஸோமீட்டர் சேலஞ்ச். கருமம். கருமம். ஒருத்தன் ஊதுனா ரோஜாப்பூ வாடிடுமாம் அதே க்ளோஸ்-அப் யூஸ் பண்றவன் ஊதுனா வாடின பூ மலர்ந்திடுமாம். கேக்குறவன் கேனப்பயலா இருந்தா கே.எஸ். ரவிக்குமார் கேட் வின்ஸ்லெட் கூட ஜோடி சேர்ந்தாருன்னு சொல்லுவாங்க :roll:


•  ஆக்ஸ் - இந்த செண்ட் அடிச்சா எல்லா பொண்ணுங்களும் பின்னாடியே வந்துருமாம். (த்ரிஷா வருமா, இல்லை அனுஷ்கா தான் வருமா?) அப்படின்னா இந்நேரம் ஒரு தேவதாஸ் கூட இருக்கமாட்டானே :lol:

•  லக்ஸ் - இந்த சோப் போட்டுக்கிட்டு அசின் நடந்தா அந்த இடத்துக்கு லைட்’ஏ தேவைப்படாதாம் அவ்ளோ பிரகாசமா இருக்குமாம். மக்களே யார் வீட்டிலாவது கரெண்ட் போச்சுன்னா உடனே லக்ஸ் போட்டு குளிங்க. அந்த இடமே பிரகாசமா இருக்கும் :shock:

•  வாசன் ஐ கேர் - இவங்க பண்ற அலும்பல் இருக்கே. கண்ணு நொள்ளையான 60 வயசு கிழவிக்கு இவங்க கண் பார்வை தருவாங்களாம். நாங்க இருக்கோம் நாங்க இருக்கோம்னு சொல்றாங்க உங்க கிட்ட பில்  கட்டிட்டு நாங்க  உசுரோட இருப்போமா டா :-?

கல்யாண் ஜுவல்லர்ஸ் - சுத்தமா புரியாத விளம்பரம் இது. மொதல்ல பிரபுவோட பொண்ணு ஓடி போற மாதிரி ஒரு கதை, இப்போ பிரபுவும் சீதாவும் குடும்பம் நடத்துற மாதிரி ஒரு கதை. நகைக்கும் விளம்பரத்துக்கும் என்னப்பா சம்மந்தம் ?  இதுல பஞ்ச் வேற நம்பிக்கை அதானே எல்லாம் :o

பொம்மீஸ் நைட்டீஸ் - இந்த நைட்டியை போட்டா தான் குடும்பத்தலைவி ஃபீலிங் வருதாம். சண்டை போடணும்னு நினைச்சாலும் இந்த நைட்டி போட்டுட்டு வர்றவங்களைப் பார்த்தா சமாதானமா போய்டுவாங்களாம். அப்போ காஷ்மீர் பார்டருக்கு ஒரு டஜன் நைட்டி பார்செல் பண்ணுங்க. எல்லாரும் சமாதானமா போகட்டும் :lol:

•  கோல்கேட் - மைக் எடுத்துட்டு வந்துடுவாங்க உங்க டூத் பேஸ்ட்’ல உப்பு இருக்கா? அவனவன் சோத்துல போடுறதுக்கே உப்பு இல்லை. இதுல பல்லு விளக்க உப்பு வேணுமாக்கும் :twisted:

ஜாஸ் ஆலுக்காஸ் - ஹி ஹி ஹி இந்த விளம்பரத்தை நான் வேற கலாய்க்கனுமா? விஜய் வந்ததால அதுவே காமெடியா போச்சு. ஆனா இன்னைக்கு வரைக்கும் புரியலை விஜய் மணியடிச்சி மோதிரம் கொடுக்கிறதுக்கு அர்த்தம் என்ன?? :mad:

•  ஐடியா சிம் கார்ட்: பேசுவதற்கு மொழி தேவையில்லை. அடங்கொப்புரானே பேச மொழி தேவையில்ல வாய் இருந்தா போதும்… இது தெரியாம் நிறைய பேரு இந்த சிம் கார்டை வாங்கி நாசமா போறாங்க… :(

•  ஹமாம் - ஏன்  சொறியிற காமி காமின்னு ஆரம்பிக்கும் இந்த விளம்பரம். யாராவது சொறிஞ்சா அதுக்கு கொசு/ மூட்டை பூச்சி. இல்லை மிஞ்சி போனா குளிக்காம இருந்தா  தான் காரணம்னு நினைச்சா. ஹமாம் சோப் போட்டு குளிக்கலைன்னா சொறி வருமா? எந்த ஊரு நியாயம் நான்சென்ஸ் :evil:


இது மாதிரி நிறைய இருக்கு, இப்போதைக்கு இது போதும். எனக்கு இப்பவே கண்ணை கட்டுது. :oops::)

2 கருத்துகள்:

  1. Idea, Alukkas, Kalayan ellam concept ad anna. ethical ah, interesting ah ad panna avanga product mela indirect ah oru mathipu, varum. athan ipdi panranga.

    Alukas ad Kalyan ad oda impression/copy( same theme on both = nambikai). Vijay ad la kooda copied ad la than nadipar pola :D

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொன்னது எல்லாம் சரி தான் நெல்சன்... ஆனா... "Sensible"அ இருக்கனும்ல...

    அத விடுங்க... இந்த எடத்துல கூட டாக்டர் விஜய்ய கலாயிசுடீங்கலே...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)