12 ஆக., 2010

CTS Interviewக்காக சென்னைப் பயணம்

9ம் தேதி ஒரு நேர்க்காணலுக்காக சென்னைக்கு போகவேண்டி இருந்தது. நானும் என் நண்பண் சிவகுமார் பொன்னையாவும் என் கூட படிச்சா நண்பனோட நண்பன் ரூம்க்கு போய் தங்கிருந்தோம். என் கூட படிச்சா சிரில் மோசெஸ், மகாராஜா, ஸ்ரீனி, சித்திக்-லாம் அவுங்க அவுங்க நண்பர்கள் ரூம்ல தங்கிருந்தங்க.

8ம் தேதியே சென்னைக்கு போயாச்சு. நாங்க தங்கியிருந்து செங்குன்றம் போற வழில. நேர்க்காணலுக்கு போக வேண்டியது தொரைப்பாக்கம் (துறைப்பாக்கம்). அங்க உள்ள CTSக்கு போகணும். 9ம் தேதி காலைல 8:30க்கு அங்க போகனுமாம். சரி.. எந்த ஏரியானு பார்த்துட்டு வந்துருலாம்னு நங்க ரெண்டு பேரும், 8ம் தேதி சாய்ந்த்தரம் ஒரு 4 மணிக்கு கிளம்பியாச்சு.

கோயம்பாடுல இருந்து சுமார் ஒன்னேகால் மணிநேரம் ட்ராவல் (அட, வன்னர்பேட்டை-ல இருந்து சங்கரன்கோவில் போற தூரம்). அவ்வுளோவு தூரம் போன, CTS Bus Stopல வண்டி நிக்காதுனு முந்துன ஸ்டாப்-லயே எறக்கி விட்டுட்டான். இருந்த பசிக்கு, ஒரு ஹோட்டல் கூட இல்லாம, ரெண்டு தண்ணி பாக்கெட் மட்டும் வாங்கி குடிச்சுட்டு நடக்க ஆரமிசுட்டோம்.

அப்புறமா ஒரு 6 மணிக்கு CTS கண்டுபிடிச்சுட்டு, சாப்பிடலாம்னு போன, எல்லா கடைலையும் 7 மணிக்கு (சாய்ந்திரம்) மேல தான் சாப்பாடு உண்டுன்னு சொல்லிட்டான். ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, சுமார் நாலு கடைல சொல்லிட்டான்.

இருந்த பசி-ல, கடியாகிபோயி பஸ் ஏறி ரூம் பக்கம் வந்து சாப்பிட்டுட்டு படுத்தாச்சு.

மறுநாள் காலைல 4 மணிக்கு எழுத்து, சண்டை போட்டு கோயம்பேடு போய், Air Busல ஒரு ஆளுக்கு 33 ரூபா குடுத்து ஸ்பாட்க்கு போய் செர்ந்துஆச்சு.

அங்க என்னடானா, இன்டெர்வியூ 9 மணிக்கு தான் ஆரமிச்சான். மொதல்ல எடுத்த உடனே “Group Discussionனு சொல்லிட்டான்.

GDல சுமார் ஒரு பத்து பேரு கூடி உட்க்கந்து “இந்த TV நமக்கு எந்த அளவுக்கு நல்லது பண்ணுதுன்னு சொல்ல ரொம்ப போராடினோம். சொல்லப் போன, சின்னதா ஒரு சண்டை. ரொம்ப பெரிய விஷயம் கிடையாது. தமிழ் சாயல் இல்லாம இங்கிலீஷ் பேசணும். அவ்வுளோவ்வுதான்! GDல ஒரு ரெண்டு மூணு பேரு தான் Eliminate ஆனாங்க.

அப்புறம் தான் வந்தது பாருங்க ஒரு ரவுண்டு. Apps Round. 55 கேள்விக்கு 50 நிமிசத்துல பதில் எழுதணும். அதுல ஒரு  25 கேள்வி “Verbal (எல்லாம் பீட்டர் மாதிரி இருந்துச்சு. ஒரே மர்மம். இப்பவும் ஒன்னும் விளங்கல). அவன் புத்திசாலி தனத்த நம்மட்ட காட்டுறான். ரொம்ப கொடும. எப்படியோ தத்தி தவறி பாஸ் பண்ணி வந்தாச்சு.

இது நடந்துதது ஒரு 12 மணிக்கு. சாப்பாடு முடிச்சுட்டு மூணு மணிக்கு வாங்கன்னு அனுப்பிட்டைங்க. ஆனா 3:15க்கு “Network Admin பதவிக்கு நேர்க்காணல் இருந்தது. சுமார் ரெண்டாயிரம் பேரு வந்துருப்பங்க. அவ்வுளோவு கூட்டம்.

நாங்க 3 மணிக்கு “Technical & HR  ரவுண்டுஸ் attend பண்ண போயிட்டோம்.

Techincal Roundல நான் தான் மொதல்ல போய் உட்க்காந்தேன். ரொம்ப நல்ல மனுஷன் அந்த HR. என்ன புரிஞ்சுட்டு ஈஸி-யா கேட்டாரு. ரொம்ப ஈஸி-னு சொல்ல முடியாது. கொஞ்சம் கடி தான்.
What are the subjects you had in your 3rd semester?னு கேட்டாரு. தெரியாதுன்னு சொல்லிட்டேன். ஒரு 15 நிமிஷம் கழிச்சு, நான் வந்து உட்காரும் போது, அங்க இருந்த 40 பேரும் என்னையே பார்த்துட்டு இருந்தாங்க. “அவரு நல்லவரு.. கஷ்டம் இல்ல னு சொல்லி எல்லாருக்கும் ஒரு சின்ன நம்பிக்கை கொடுத்தேன். 25 பேரு செலக்ட் ஆனாங்க. அதுல நானும் ஒருத்தன்.

எப்படியோ, ஒரு வழியா இண்டர்வியூவ முடிச்சுட்டு நெல்லை வரதுக்குள்ள போதும் போதும் ஆயிடுச்சு.

spelling mistake இருந்த மன்னிக்கவும்.

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)