10 ஆக., 2010

வண்ணார்பேட்டையில் புதிய மேம்பாலம்



சுமார் 2 வருஷமா கட்டிட்டு இருந்த நம்ம வண்ணார்பேட்டை மேம்பாலத்த ஒரு வழிய ஆகஸ்ட் 6ம் தேதி தொறாந்துட்டாங்க..

வண்ணார்பேட்டைல ரொம்ப முக்கியமான இடம், நம்ம ரவுண்டுடான. ஆனா... இந்த பாலம் கட்டணும்முனு, வண்ணாரப்பேட்டை ரவுண்டுடானாவ இடிச்சு தரைமட்டமா அக்கி 2 வருஷம் கழிச்சு பாலம் கட்டி முடிச்சுட்டாங்க... (ரெண்டு வருஷம் இல்லையாம்... 17 மாசமாம்.. நண்பர் சொன்னார்)


அதுபோக, செல்லப்பாண்டியன் சிலையை பாலம் கட்டனும்முனு சொல்லி தூக்குனாங்க.. இப்போ, அவர் சிலையை அதே இடத்தில வச்சு, நல்ல அழகா செஞ்சுட்டாங்க...

துணை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வருகை தந்து பாலத்தை திறந்து வைத்தது மட்டும்மல்லாமல், மேலும் பற்பல நல்ல கரியைங்களை செஞ்ச்கிடு போயிருக்காரு(ன்னு சொல்றாங்க)..

பாலத்த கொஞ்சம் வித்தியாசமா கட்டி இருந்த இன்னும் நல்ல இருந்துருக்கும். பழைய பேருந்து நிலையம் ரோடு-டூ-பாளை பேருந்து நிலையம் ரோடு (ஆதாங்க.. நம்ம RMKV முன்னாடி வரைக்கும்) பாலம் போட்டுருந்த டிராபிக் நல்ல கொறைஞ்சுருக்குமுன்னு என்னோட அபிப்பிராயம்.

ஆனா ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே இத பத்தி பலர் ஆராய்ந்து தான் இந்த முடிவுக்கு வந்துருக்காங்கல்லாம். அதனால, No Comments!

இப்போ, பழைய பேருந்து நிலையம்-டூ- புது பஸ் ஸ்டாண்ட்க்கு பை-பாஸ் வழிய போன, பாலம் ஏறி தான் போகணும். நம்ம FX காலேஜ்ல இருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு போனும்னாலும், பாலத்த ஏறி தான் போகணும். அது தான் கொஞ்சம் கடியா இருக்கு. மத படி, பாலம் பல பலன்னு மின்னுது.. :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)