5 ஆக., 2010

லஞ்சமும் – கைதும்

இந்த லஞ்சம் கொடுத்து அதிகாரிகள சிக்க வைகுறது இப்போ ரொம்ப பேமஸான ஒரு விசியமா இப்போ இருக்குதுங்க... அது ஒரு பெரிய தொழில் மாதிரி நடக்குதுன்னு சொல்லுறாங்க...(நமக்கு தெரியாதுல... அதான் கேட்டேன்)

இந்த லஞ்சம் கொடுத்து சிக்க வைக்குற தொழிலல்ல இப்போ கொஞ்ச நாளாவே,
பெரிய அதிகாரிகள் சிக்காம, சின்ன சின்ன சில் வண்டுகள் தான் சிக்குது...

2000 லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அதிகாரி கைது..

ருபாய் 500 லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக ஊழியர் கைது

அதுலையும் ஒரு பெரிய அவமானம் என்னனா, சும்மார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அதிகாரிய கையும்-களவும்மா புடிச்சது தான்...

பாவம் அந்த அம்மா... அதுக்கு என்ன விட பெரிய பசங்களே இருப்பாங்க போல... அவமானம் தங்காம அவ்வுளோவு அழுதிச்சு... போயும் போயும் ஒரு 500 ரூபாய்க்காக அத்தன வருசமா அந்த அம்மாக்கு இருந்த மரியாத எல்லாத்தியும் குழி தோண்டி மூடி மரம் நட்டு வச்சுடாங்க..

என்னக்கு என்ன ஒரு சந்தேகம்னா...

நம்ம ஊரு ஆபிசர்ஸ் எல்லாம் ரூ. 2000க்கு மேல லஞ்சம் வாங்குறது இல்லையா???

ஏன்?? எல்லாரும் திருந்திடாங்களா?? :D

இல்ல, நிறைய லஞ்சம் வாங்குற ஆபிசர்ஸ் எல்லாம் ஒன்னா யூணியன் வச்சு “நிறைய லஞ்சம் வாங்குபவர்களை ‘வீடியோ படம் எடுக்காமல் இருக்க, ‘வீடியோ ஆசாமிகளுக்கு ஒரு ‘கிட்டிங் அம்மௌன்ட் குடுத்து அவுங்க பக்கம் இழுத்துடாங்களா??

ஆமா?? இந்த video footage ஆசாமிகளை ‘வீடியோ எடுப்பது யார்?? மொதல்ல ‘வீடியோ ஆசாமிகளை நெறி படுத்துத ஒரு டிபார்ட்மண்ட் உருவாக சொல்லி நம்ம தலைவர்ட சொல்லணும்... J

என்ன நடக்குதுன்னு தெரியலப்பா... இந்த பாஸ் போர்ட் அப்பலை பண்ண கூட லஞ்சம் கேட்குராங்களா என்ன??? அப்படினா எவ்வுளாவ்வுனு  சொல்லுங்கப்பா..


பின் குறிப்பு: இது மக்கள் கருத்து.. I am பாவம்..

2 கருத்துகள்:

  1. ரொம்ப அப்பாவியா ஆணித்தரமான சப்ஜெக்ட தொட்டுருக்கீங்க. ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் கையும் களவுமா பிடிபட்ட போது காலிலேயே விழுந்தார். இவர்கள் எல்லாம் வேலை போனவுடன் தெருத் தெருவா சுத்தும் போது தான் பேசாம ஒழுங்கா இருந்துருக்கலாமோன்னு feel பண்ணுவாங்க.

    பதிலளிநீக்கு
  2. "எல்லாத்துக்கும் ஆசை தான் காரணம்" எங்க அப்பா சொல்றாரு...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)