வேல வெட்டி இல்லாம இருக்குறதால தருமபுரி பக்கம் போயி, தாத்தா பாட்டி மாமா மற்றும் எல்லாரயும் பார்க்க போனேன்...
அப்போ... என் மாமா கடைல உட்காந்து பேசும் போது ஒரு கட்சி ஆளு (என் மாமாவும் கட்சி ஆளு தான்.. சுமார் 13 வருசமா..) வந்து மாமாட பேச்சு குடுத்தாரு...
அப்போ என் மாமா போட்டாரு பாருங்க ஒரு கேள்வி...
“இப்போ நடத்து முடிஞ்சா ‘செம் மொழி’ மாநாட்டுக்கு ஏன் நம்ம தலைவர் அப்துல் கலாம்-அ கூப்பிடல??”
எல்லாரும் திரு திருனு முளிச்சங்க (அந்த பிரமுகர் உட்பட).. அப்போ என் மாமா சொன்னாரு பாருங்க ஒரு பதில்...
“கர்நாடக சட்டசபை கட்டடம் திறப்பு விழாக்கு போக நேரம் இருந்த நம்ம கலாம்கு, தமிழக சட்டசபை கட்டடம் திறப்பு விழவிற்கு வர நேரம் இல்லையா?? அதான் நம்ம தலைவர் அழைப்பு விடுக்க மறந்துட்டாரு”னு காரணம் சொன்னாரு...
எது எப்படியோ... நமக்கு sms booster போடுரதுக்கும் top-up போடுரதுக்கும் அப்பா ரூபா தந்துறாரு... அது வரைக்கும் நமக்கு சந்தோசம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)