15 ஜூன், 2010

தமிழ் கொலை டூ ஆங்கில கொலை..

என் அருமை நண்பர்களே! உடன் பிறவா உடன் பிறப்புகளே (ராஜா அண்ணா.. உங்கள தான்!!)! அனைவருக்கும் வணக்கம்.

தமிழ் மீது நான் கொண்ட காதலால் தான் இந்த ப்ளாக் முழுவதும் தமிழ்ல் இருப்பதாக யாரும் தப்பு கணக்கு போடதீங்க!!

மேட்டர் என்னன்னா... சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு (வெயிட்.. சின்ன flashback தான்.. பயப்பட வேண்டாம்), எங்க அம்மா "சாந்தி", சும்மா இருந்த என்ன சீண்டி பார்க்குற மாதிரி "தமிழ்ல ரெண்டு வர்த்த எழுதி காமிடா"னு சொல்லி என்ன கேவல படுத்திட்டாங்க (அழுக வருதுல???நோ பீலிங்க்ஸ்... )!!! அந்த வேறில ஆரமிச்ச இந்த ப்ளோக்ல கஷ்டப்பட்டு ஒரு 20 இடுக்கைகள் தொடுத்துட்டேன் (அதுக்கு நான் பட்ட கஷ்டம் என்னக்கு தான தெரியும்).. எதோ Brad & Pageன்ற ரெண்டு புண்ணியவான் கண்டு புடிச்ச Googleல வச்சு தமிழ்ல டைப் பண்ணி காலம் தள்ளியாச்சு!! இதுக்கு மேல முடீல!! போதும்.. என்ன முடியாது... ஏன்ன எனக்கு வராது... அட.. தமிழ்ல டைபிங் வராதுன்னு சொன்னேன்...

அதனால நான் கூற வருவது என்னவென்றால், "நான் இத்தனை நாள் தமிழை கொலை செய்தது போல, இனி ஆங்கிலத்தில் இடுக்கைகளை இடுத்து ஆங்கிலத்தை கொள்வேன் ('ள்' இது தான?? இல்ல இந்த 'ல்' வருமா??) என்று உறுதி அழிக்கிரேன்!!" ;)

இது நாள் வரைக்கும் தந்த அதே ஆதரவை நீடிகும்மாறு கேட்டு கொள்கிரேன் ...

(முட்ன்ஜிது பா!!)

3 கருத்துகள்:

  1. அருமை அருமை .. தம்பி துவங்கட்டும் உன் ஆங்கில சேவை ...

    பதிலளிநீக்கு
  2. As i am commenting from my mobile,
    i cant able to express it in Tamizh :)
    I bookmarked your blog in my mobile.
    Also i enjoy reading Tamizh blog.
    Okay :)
    then, when will you start Killing English ?

    பதிலளிநீக்கு
  3. நன்றி அண்ணா... உங்கள் ஆசிக்கு நன்றி..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)