6 ஜன., 2010

குஜராத்அ சுத்தி பார்க்க போறேன்...


HacXploit-னு ஒரு workshop வற்ற 30,31-ஆம் தேதி குஜராத் "திருபாய் அம்பானி தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் கல்லூரி(DA-IICT)"ல வச்சு நடக்குது..





நான் ஒரு தவகல் தொழில்நுட்ப மாணவன்.. அதுவும் கடைசி வருஷம்..



எங்க கல்லூரில மொத்தம் 5 பிரிவுகள்.. ECE, EEE, CS, மேச் மற்றும் IT..



இதுல, IT (நான் படிக்கும் பிரிவு) தான் ரொம்ப மட்டம்..



மட்டம்னு சொல்ல முடியாது.. எங்கள மட்டம் தடுவங்க..



ஒழுங்கான "கணினி அறை" கிடையாது.. இதுல, B.Tech.,(IT) போக M.Tech., (IT) வேற..


"என்ன கொடும சார் இது..."



ஆனா.. இந்த DA-IICT கல்லூரி இருக்கே...



தவகல் தொழில்நுட்பத்துக்குன்னு(IT) தனிய ஒருகல்லூரி...



இன்னும் அங்க போகல.. ஆனா.. IT சம்பந்தமான ஆயுவுகள்(Research) எல்லாம் அங்க தான் பண்ணுறாங்கலாம்...ரொம்ப பெரிய கல்லூரியாம்..



இப்ப தான் train டிக்கெட் எடுத்துருக்கேன்.. குஜராத் போக 600 ரூபா... sleeper கிளாஸ்...



ஆனா.. வரதுக்கு sleeper கிளாஸ்ல டிக்கெட் எல்லாம் புல்லாம்.. :( :( :(



சோ, 3rd AC.. அட மக்கா.. அதுக்கு மட்டும் 1600 ரூபா.. அதுவும், சென்னை வரைக்கும் தான்..பின்ன.. சென்னை டு நெல்லை 250 ரூபா.. :(



ரொம்ப கஷ்டம்டா சாமி..



எப்டியோ... அப்பாட பேசி டிக்கெட் எடுத்தாச்சு..



எப்போ 26-ம் தேதி வரும்னு காத்துகிட்டு இருக்கேன்...



குஜராத்-ல என்ன ஸ்பெஷல்-னு யாராவது சொல்லுங்க ப்ளீஸ்... :)

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)