13 ஜன., 2010

3 Idiots vs 5 point someone


3 idiots -னு அமீர் கான் படம்.. 2 நாளைக்கு முன்னாடி முத்து-ராம் theatre -ல பார்த்தேன்.. படம் வந்து ரொம்ப நாள் ஆகுது.. ஆனா, நெல்லை-ல இப்போ தான் ரிலீஸ் ஆச்சு..

அட.. நம்ம 5 Point someone கதைல வரமாதிரி 3 பசங்க.. Racho - Farhan - Raju . ஒரு பொண்ணு neha .

ஆனா, அந்த புக்-ல அவுங்க பேரு, Ryan, Hari, Alok அண்ட் அந்த பொண்ணு pia .


நம்ம படத்தோட டைரக்டர் மற்றும் ஸ்டோரி ரைட்டர் "ராஜ்குமார் ஹிரானி" ரொம்ப நல்லா கதைய மாத்தி அமைச்சிருக்கார். அந்த characters பேர பாருங்க.. Ryan-அ Racho-னும், Alok -அ Raju-னும் மாத்திறுக்காறு. அதே மாதரி கதை தொடக்கம் கூட இருக்கு.

Five Point Someone

புக்ல நம்ம ஹரின்ற கதாபத்திரம் கதைய சொல்லும். அதே போல, நம்ம மாதவன்.ரா  அவர்கள் பார்ஹன்-ன்ற கதாபத்திரத்தில இருந்து கதைய சொல்லுறாரு.

நாம Ryan ரொம்ப முற்போக்கான ஆளு. எப்போவும் நம்ம இந்தியன் eduation சிஸ்டம மாத்தனும்-னு சொல்லுற ஆளு..

நம்ம Alok, அவரு மெகா-சீரியல் மாதிரி. பக்கவாதம் வந்த அப்பா. எப்போவும் அழுற அம்மா. முதிர்கன்னி அக்கா. இவன் படிச்சு, சம்பாரிச்சு எல்லாத்தையும் சரி பண்ணனும்.

நம்ம hari . அவருக்கு தான் புக்-ல nehaன்ற காதலி.ஆனா படத்துல, Ryan(Racho)க்கு காதலி. இந்த neha , mechanical engineering department HODயோட பொண்ணு(அது புக்ல.. ஆனா, ப்ரின்சிபலோட பொண்ணு - அது படத்துல). வழக்கம் போல ஹரி(எ)Farhan மத்தவுங்கள பத்தி பேசி பேசி, தன்ன பத்தி சொல்ல மறந்துர ஒரு கேரக்டர்.

3 பசங்களும், ICE (Imperal காலேஜ் of இன்ஜினியரிங்)-ல mechanical engineering படிக்கிறாங்க. ரொம்ப பெரிய காலேஜ். யாருக்கும் ஈஸி-அ சீட் கிடைக்காது. ஹாஸ்டல்-ல ஒரே ரூம்.

இங்க HOD இல்ல. அதுக்கு பதிலா பிரின்சிபால். நம்ம Boman Irani , சுருட்ட முடி வச்சிட்டு, ஒரு காமெடி intro -ஓட வராருன்னு பார்த்த, அடுத்த frame-லயே முட்டைய ஒடச்சு தத்துவம் பேசி, ஒரு வில்லன் range -கு intro கொடுதிருக்காரு.

மொத நாள் ராகிங்.. புக்அ பொறுத்த வர, ராகிங்-ல Ryan தான் ஹீரோ. அதே மாதிரி தான் இதுலயும்.

ராகிங்-ல நம்ம 2 ஹீரோஸ்   (மாதவன்.ரா & ஷார்மன் ஜோஷி) ஜட்டியோட நிக்கிறாங்க. ஆனா, அமீர் கான் கொடுக்குற intro, செம காமெடியா இருந்தாலும் பல ஹாஸ்டல் பசங்களுக்கு ஒரு சூப்பர் ஐடியாவ கொடுதுருக்காரு.    .               

அமீர் கான் ரொம்ப ஜாலியான டைப். காலேஜ் லைப்-அ அணுஅணுவா அனுபவிக்க வந்தவர். படிப்பை காதலிக்கும் ஒரு மாணவன்.

ஆனா மத்தவங்க, ஒரு காதல் இல்லாம(படிப்பு மேலைங்க) தாத்தா சேத்துவிட்டாரு, அப்பாவால படிக்க முடியல, என்ன படிக்க வைக்குறாருனு கடமைக்காக படிக்குறாங்க.

மாதவனுக்கு போட்டோகிராப்பி பிடிக்கும். படத்துல வன விலங்குகளை போட்டோ எடுத்து புக் எழுதுவாரு.

ஆனா புக்ல கதைய சொல்லுறதே நம்ம மாதவன் கேரக்டர் தான். எப்புடி காப்பி அடிச்சிருக்காங்க.

மொத நாள் கிளாஸ்-ல "what is a machine "-னு professor கேக்குறது புக்-லையும் இருக்கு படத்துலையும் இருக்கு. அட்ட காப்பி மக்கா.

அப்புறம், படம் ஸ்மூத்தா நகருது. புக்-அ காப்பி அடிச்சது தெரிய கூடாது-னு காட்ட ஒரு சின்ன ட்விஸ்ட். ஹ்ம்ம்.. அது தேவையே இல்ல.

கொஞ்சம் காதல், நிறைய நட்புனு புக்-அ வாசிக்கிற மாதிரியே இருந்தது.

கிளைமாக்ஸ்ல அமீர் கான் பிரசவம் பார்கிறது ரொம்ப touching.       

மொத்ததுல சூப்பர் படம். கண்டிப்பா பாருங்க.. தியேட்டர்ல போய் பாருங்க..

7 கருத்துகள்:

  1. oru idiot ae "3IDIOTS" padam patha thu!!!!!!

    பதிலளிநீக்கு
  2. அடடே.. ஆச்சிரிய குறி... :) கோக்க மக்க... லொள்ளு தான உனக்கு..

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா14 ஏப்., 2010, PM 9:27:00

    Nanga padam pakuramoe illayo padatha pathina vimarsanan nalla iruku...

    பதிலளிநீக்கு
  4. நானும் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதனும்ன்னு நெனச்சேன் ... ஆனா தமிழ் ரீமேக் ல டாக்டர் விஜய் நடிக்கிராராமே .. அதுனால நமக்கு ஏன் வம்புன்னு விட்டுட்டேன் ;)

    பதிலளிநீக்கு
  5. அண்ணன் விஜய்-யா பத்தி யாரும் பேச கூடாது...

    அப்புறம் பேசுனவுங்கள குண்டர் சட்டத்துல உள்ள போட்டு, ஒரு நாளைக்கு 3 தடவ "குருவி" படம் பார்க்க வைப்பாங்க... அப்புறம் உங்க இஷ்டம்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)