6 ஜூலை, 2009

முதல் நாள் இன்று




இன்று நடந்த காலேஜ் கலாட்ட.. 


செமஸ்டர் முடிந்து இன்று தான் வகுப்புகள் ஆரம்பம்..


நாங்கள் FINAL இயர் என்பதால் "Communication For Interview" வகுப்பு நடந்து...


மதியம் டீ பிரேக்கில் கல்லூரி உணவகத்துக்கு சென்று கும்மாளம் போட்டோம்...


இந்த செய்தி "பிரின்சிபால்"க்கு தெரிந்து அவர் நேராக அங்கு வந்துவிட்டார்..


நானும் என் நண்பனும் உணவகத்துக்கு பின்னால் உள்ள கழிவறைக்குச் சென்றிருந்தோம்..


சுமார் 20 மாணவர்கள் அவரிடம் மாட்டிகொண்டனர்...


4 பசங்க shoe போடலனு வீட்டுக்கு அனுபிட்டார்..


மற்ற அனைவர்க்கும் "நாற" கிழி.. சென்னை பாசைல..


அதுக்குள்ள மற்ற வகுப்பு மாணவர்கள் அவரை கண்டு பயந்து அங்கே வந்து ஒளிந்துகொண்டார்கள்.. 


சுமார் ஒரு மணிநேரம்... கழிவறைலிருந்து வெளிவராமல் அதன் வாசலில் நின்று கொண்டு இருந்தோம்..


நானும் என் நண்பனும் கழிவறைலிருந்து மற்றவர்களுக்கு sms செய்து விவரம் பெற்றோம்..  


பாவி பசங்க.. பாசத்ல ஒரு பொய்யான sms அனுப்பினாங்க.. "மச்சி.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. அவரு கண்ல மாட்டாம வா டா.."னு sms..    


பின்னர் வெளியே எட்டி பார்த்தல், அவரை காணவில்லை..


நேராக வகுப்புக்கு சென்றால், HOD அரை வாசலில் அனைவரும் நின்று திட்டு வாங்கிகொண்டு இருந்தார்கள்..


அப்போ தான் தெரிந்தது.. அந்த sms பொய்னு.. 


பின்னர் நங்கள் இருவர் மட்டும் தனியாக HODட சென்று, எனக்கு வந்தி வந்தது என்று ஒரு புருடா விட்டு விட்டு வகுப்புஅறைக்கு சென்றால், மணி 4:30.. 


ஒரு 20 நிமிடம் அங்கு உக்காந்துவிட்டு வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது...


"முதல் கோணல், முற்றிலும் கோணல்"...     

4 கருத்துகள்:

  1. சீனியர் பசங்களா நீங்க? ஓகே.. ஓகே.. ஆல் த ​பெஸ்ட் ஃபார் ​பைனல் இயர்.
    //சுமார் ஒரு மணிநேரம்... கழிவறைலிருந்து வெளிவராமல் அதன் வாசலில் நின்று கொண்டு இருந்தோம்..//
    என்னா திகிலா இருக்கு இந்த காலேஜ்???

    பதிலளிநீக்கு
  2. பாஸ்..

    முதல் நாளே செம த்ரில்...

    இன்னும் என்ன என்ன ஆக போகுதோ???

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)