7 ஜூன், 2009

கடவுள் call centre




கடவுளிடம் நாம் செய்யும் பிரத்தனைகளும், வேண்டுகோளும் அதிகரித்து விட்டதால் 'கடவுள்கள் கூட்டமைப்பு' புதிதாக 'call centre' ஆரம்பித்துள்ளனர்... 


அதன் பெயர் "Heaven tel"(airtel மாதிரி..)


நீங்கள் கடவுளை வேண்டும் பொழுது pre-recorded voice சொல்லும்..


"பக்தா! என்னை அழைத்ததற்கு நன்றி! 
நீ கணேஷானிடம்  பேச வேண்டுமா?? - 1 அழுத்தவும்..        
நீ சிவனிடம் பேச  வேண்டுமா?? - 2 அழுத்தவும்..
நீ கிருஷ்ணானிடம்  பேச வேண்டுமா?? - 3 அழுத்தவும்..
மற்ற கடவுள்களின் பட்டியலை காண எண் 4 அழுத்தவும்...



மேலும் விவரங்கள் பெற 9 அழுத்தவும்..."
இப்போ நீங்க 1 அழுத்தி கணேஷனை தொடர்புகொண்டால்,    


"வேண்டுதல் செய்ய - 6 அழுத்தவும்..
நன்றி சொல்ல - 7 அழுத்தவும்..  
மற்ற வசதிகளை பெற - 8 அழுத்தி 'தேவதைகளிடம்' பேசலாம்'.."  
நீங்கள் பேசும்பொழுது நாரதர் பஜனை சத்தம் கேட்டால், * அழுத்தி அந்த பாடலை உங்கள் 'ஹலோ tune'ஆகா பெறலாம்..   



ஒரே நாளில் இரண்டு முறை பிராத்தனை செய்தல், "நீங்கள் ஏற்கனவே ஒரு முறை வேண்டி விட்டீர்கள்.. மீண்டும் நாளை பிராத்தனை செய்யவும்.. அவசர பிராத்தனைகளுக்கு, எங்கள் அனுமதி பெற்ற நிறுவங்களை தொடர்பு கொள்க..."

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை கீழே போடவும் (No Bad Words.. I am பாவம்)